உண்மைச் சரிபார்ப்பு: தொங்கும் மரத்தின் வைரலான கூற்று தவறானது; உருவாக்கம் என்பது ‘ப்ராப் ரூட்’ நிகழ்வின் விளைவாகும்
- By: Devika Mehta
- Published: Jan 8, 2023 at 03:34 PM
- Updated: Jan 31, 2023 at 12:55 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): இந்தியாவில் சில சமயங்களில் மதமும் மூடநம்பிக்கைகளும் கைகோர்த்துச் செல்கின்றன; தற்போது, ஹரியானா மாநிலம் சம்தா கோவில் வளாகத்தில் மரம் ஒன்று தொங்குவதாக முகநூல் பதிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விசாரணையில், ஹிசார் மாவட்டத்தின் ஹன்சி நகரத்தில் தொங்கும் மரத்தின் பின்னால் அறிவியல், பகுத்தறிவு ஆகியவற்றின் விளக்கம் இருப்பதால், இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்தது.
உரிமைகோரல்:
முகநூல் பயனர் நரேந்திர கிரவுன் படேல் சமூக ஊடகங்களில் அனில் சாஹுவின் ரீலைப் பகிர்ந்துள்ளார், அதில் கூறியிருப்பதாவது: ‘தொங்கும் மரம் ஒரு அதிசயம்’.
இந்தthe இடுகையின் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.
விசாரணை:
விஸ்வாஸ் நியூஸ் முதலில் வைரலான காணொளியை ஆய்வு செய்தது, அதில் ஒரு பெண் தொங்கும் மரத்தைப் பற்றி பேசுகிறார்; அவர் அதை ஒரு அதிசயம் என்று அழைக்கிறாள், மேலும் அது தரையைத் தொடவில்லை என்பதை நிறுவ கை சைகைகளைப் பயன்படுத்துகிறார்.
வைரலான காணொளியிலிருந்து கீஃப்ரேம்களைத் தேட INVID கருவியைப் பயன்படுத்தினோம், மேலும் அது தொங்கும் மரத்தைக் காட்டும் யூடியூப் காணொளியை கண்டறிந்தோம். இருப்பினும், சுமார் 1:10 வினாடிகளில், மரத்தின் ஒரு பகுதி தொங்குவதையும், ஆனால் மற்ற பகுதி தரையில் இணைக்கப்பட்டுள்ளதையும் காட்டுகிறது.
விஸ்வாஸ் செய்தி நிறுவனமும் ஒரு திறந்த தேடலை மேற்கொண்டு, கோவில் வளாகத்தை விவரிக்கிற ஒரு செய்தி அறிக்கையைக் கண்டறிந்தது,
இதற்காகவே, ஹிசாரைச் சேர்ந்த ஜாக்ரன் நிருபர் சேத்தன் சிங்கையும் நாங்கள் தொடர்பு கொண்டோம், அவர் விளக்கி கூறியதாவது, “இந்த மரம் அக்ஷய வத் விருக்ஷா என்ற பெயரில் அல்லது பட்கா மரம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஹன்சியிலுள்ள பாபா ஜகன்னாத்புரி சமதா கோயிலில் உள்ளது. ஜெகநாத பூரி பாபா இந்த கோவிலுக்கு வந்து இங்கு ‘சமாதி’ அடைந்ததாக நம்பப்படுகிறது. அதனால்தான் மக்கள் இந்த மரத்தை அதிசயமாகக் கருதி அதன் மீது சிவப்பு நூலைக் கட்டுகிறார்கள்.”
‘அதிசயம்’ மரத்தைப் பற்றிச் சுட்டிக் காட்டியதாவது, “இது நடுப்பகுதியில் இருந்து முறிந்து போன ஒரு ஆலமரம் ஆகும், ஆனால் அதன் கிளை தரையைத் தொடும்போது, அது வேரூன்றிவிடும். மரத்தின் கிளை என்பது அதில் தானே ஒரு புதிய மரம் ஆகும்… அதன் கிளை பழைய மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.”
ஒரு நுணுக்கமான பார்வையைப் பெற, விஸ்வாஸ் நியூஸ், ஹன்சியிலுள்ள வன அதிகாரி, ரமேஷ் யாதவ் ஆகியோரையும் தொடர்புகொண்டபோது அவர் கூறியது என்னவென்றால், “சமதா கோவிலில் தொங்கும் மரம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததும், நாங்கள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அது ஒரு ஆலமரமாக இருப்பதைக் கண்டோம். அதன் வேர்கள் கீழ் பகுதியில் பரவி மேல் பகுதியில் உள்ள கிளைகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தொங்கும் மரம் என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை”.
தனித்துவமான உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக இணையத்தில் அலசிப் பார்க்கும்போது, இதேபோன்ற சூழ்நிலையை விவரிக்கிற ‘ப்ராப் ரூட்’ என்ற சொல்லையும் விஸ்வாஸ் நியூஸ் கண்டது. Dictionary.com இன் படி, அலையாத்தி போன்ற தாவரங்களில் நிலத்திற்கு மேலே உள்ள தண்டிலிருந்து வளர்ந்து, அதுவே அந்த செடியை தாங்கும் ஒரு வேர்தான் ‘ப்ராப் ரூட்’ ஆகும்.
ஒரு சிறந்த புரிதலைப் பெற, விஸ்வாஸ் நியூஸ், தாவர அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் ராகேஷ் சிங் செங்கரை அணுகியபோது, அவர் கூறியதாவது, “இந்த அலையாத்தி தாவரம் ‘ப்ராப் ரூட்’ (முட்டு வேர்) காரணமாக உயிர்வாழ்கிறது, தாவரத்திற்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கூறுகள் வழங்கும் இவை, “நிலக்கீழ் தண்டுகள்”, அல்லது “வேர்த்தண்டுகள்” என்றும் அழைக்கப்படுகிறது.; இதற்கிடையில் தாவரத்தின் மேல் பகுதி உயிர்வாழ்வதற்காக ஒளிச்சேர்க்கை செய்கிறது.”
ஆர்.எஸ்.செங்கர், மோடிபுரம் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண் உயிரி தொழில்நுட்பத்தின் பேராசிரியர் மற்றும் HoD ஆகவும் உள்ளார்.
இந்த பயனரை பற்றிய ஒரு சமூக தேடல் நடத்தியதில், இவர் குஜராத்தில் உள்ள மெஹ்சானாவில் வசிப்பவர் என்றும் முகநூலில் இவருக்கு 4.7K நண்பர்கள் இருப்பதையும் 453 பேர் இவரை பின்தொடர்வதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவு: ஹிசாரில், ஹன்சியில் உள்ள சமதா கோவிலில் தொங்கும் மரம் பற்றிச் சொல்லும் வைரலான கூற்று தவறானது. இது ‘ப்ராப் ரூட்’ நிகழ்வின் விளைவு ஆகும்.
- Claim Review : தொங்கும் மரம் ஒரு அதிசயம்
- Claimed By : நரேந்திர கிரவுன் படேல்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.