X
X

உண்மை சரிபார்ப்பு: இந்த வைரல் காணொளி மதுரையின் சித்திரை விழாவுடையது, ஜகன்னாத் ரத யாத்திரை அல்ல.

விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையின் மூலம், ஜகன்னாத் ரத யாத்திரையைப் பற்றிய வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது. இந்தக் காணொளி தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் நடந்த மதுரை சித்திரைத் திருவிழாவினுடையது. அதுவே இப்போது ஜகன்னாத் யாத்ரா என்று பகிரப்பட்டிருக்கிறது.

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): இது ஜகன்னாத் ரத யாத்திரையின் ஒரு காட்சி என்ற க்ளைமோடு ஒரு ரத யாத்திரையின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையில் கண்டுபிடித்தது. இந்த வைரல் காணொளி தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் நடக்கும் மதுரை சித்திரைத் திருவிழாவினுடையது, ஜகன்னாத் ரத யாத்திரை என்று சொல்லி பகிரப்படுகிறது.

க்ளைம்:

பேஸ்புக் பயனர் பிரஷாந்த் பாட்டீல் இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்து எழுதினார் (ஆங்கில மொழிபெயர்ப்பு), “சனாதன தர்மம் என்னவென்று அறிய ஒரு உதாரணமாக இந்த காணொளித் துணுக்கைப் பாருங்கள். ஒழுங்கு என்றால் என்ன? நீங்கள் பார்க்க விரும்புவது என்ன? ஜகன்னாத் ரத யாத்திரையின் இந்த காணொளித் துணுக்கைப் பாருங்கள். லட்சக் கணக்கான மக்கள் சேர்ந்து, ஒற்றைத் தாள லயத்துடன், நடக்கிறார்கள்! யாரும் எது வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் உண்மை எங்காவது இருந்தால், சகிப்புத் தன்மை எங்காவது இருந்தால், ஒழுங்கு எங்காவது இருந்தால், உறுதி எங்காவது இருந்தால், பக்தி எங்காவது இருந்தால், சக்தி எங்காவது இருந்தால், ஆற்றல் எங்காவது இருந்தால், அது சனாதனிகளிடம் மட்டும்தான் உள்ளது. ஆஹா! மந்திரங்களின் இந்தப் புனிதமான சப்தம், இந்த அரிய காட்சி. எவ்வாறு மயங்காமல் மயக்கத்தில் இருக்க முடியும்.. ஜயது சத்யா சனாதன் சன்ஸ்கிருதி.”

இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பாருங்கள்

புலன் விசாரணை:

இந்த வைரல் க்ளைமின் உண்மைத்தன்மையை அறிவதற்காக, நாங்கள் அந்தக் காணொளியின் சில க்ராப்களை வெளியெடுத்து அவற்றை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். இதற்கிடையில், அதன் உண்மைக் காணொளி பாலமுருகன் என்ற பெயருள்ள ஒரு யூடியூப் சேனலில் மே 2, 2018 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். அதன் தலைப்பில் கொடுக்கப்பட்டிருந்த தகவலின்படி, அந்த வைரல் காணொளி தமிழ் நாட்டில் உள்ள ஒரு நகரமான மதுரையில் நிகழ்ந்த சித்திரைத் திருவிழாவிலிருந்து எடுக்கப்பட்டது.

இதே காணொளியை பல மற்ற யூடியூப் சேனல்களிலும் நாங்கள் கண்டுபிடித்தோம். அனைவரும் இதை மதுரையின் சித்திரைத் திருவிழாவின் காணொளி என்றே கூறி இருந்தனர். சிவ பிரசாத் என்ற பெயருடைய ஒரு யூடியூப் சேனல் இதேபோன்ற ஒரு காணொளியை 2017-ஆம் வருடத்தில் பகிர்ந்து, தலைப்பில் “சித்திரைத் திருவிழா” என்று எழுதியிருந்தது.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பல முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் கூகுளில் தேட ஆரம்பித்தோம். சித்திரை விழா என்பது சித்திரைத் திருவிழா, மீனாக்ஷி கல்யாணம் அல்லது மீனாக்ஷி திருக் கல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது என்பதை அறிந்தோம்.

மதுரை நகரில், இந்த விழா ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு மிக சிறப்பான முறையில் கொண்டாடப் படுகிறது. தமிழ் நாள் காட்டியின்படி, சித்திரை என்பது வருடத்தின் முதல் மாதம். இந்த மாதத்தின் பௌர்ணமியின்போது, மதுரை சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும்.

புலன் விசாரணையை மேலும் தொடர்ந்து, நாங்கள் சித்திரைத் திருவிழாவின் ரதம் யாத்திரையைப் பற்றி தேட ஆரம்பித்தோம். பல வருடங்களின் திருவிழாக்களின் புகைப்படங்களில் அதே ரதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாங்கள் கண்டு பிடித்தோம். இதே ரதம் சித்திரைத் திருவிழாவில் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. அதே ரதம் இந்த வருட ரத யாத்திரையிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு நாங்கள் லார்ட் ஜகன்னாத் ரத யாத்திரையின் காணொளிகளைத் தேடினோம். 2022 வருட ரத யாத்திரையைப் பற்றிய காணொளியை இங்கே காணலாம்.

மேல் விவரங்களுக்காக, நாங்கள் ரத யாத்ராவை படம் பிடிக்கும் மதுரா பிக்சர்ஸ்-இன் செய்தித் தொடர்பு அலுவலரான கோபால் கிஷன் ராஜேஷ் அவர்களோடு தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்த வைரல் க்ளைம் பொய் என்று கூறினர். இந்தக் காணொளி ஜகன்னாத் ரத யாத்ரையோடு எந்த தொடர்பும் கொண்டது அல்ல. இது தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் நடைபெறும் மதுரை சித்திரைத் திருவிழாவுடையது. மதுரை சித்திரைத் திருவிழாவின் ரத யாத்திரையை நடத்துவதற்கு இந்த ரதம் பல முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

https://youtu.be/iId8kzYgO04

புலன்விசாரணையின் முடிவில் விஷ்வாஸ் நியூஸ் பேஸ்புக் பயனர் பிரஷாந்த் பாட்டீலைப் பற்றி ஒரு சமூக ஸ்கேனிங் செய்தது. அந்தப் பயனரை ஃபேஸ்புக்கில் 742 பேர் தொடர்கிறார்கள். தற்குறிப்பில் சொல்லப்பட்டுள்ள தகவலின்படி, இந்தப் பயனர் குஜராத்தில் வசிப்பவர். பிரஷாந்த் பாட்டீல் ஃபேஸ்புக்கில் 2012 முதல் உள்ளார்.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையின் மூலம், ஜகன்னாத் ரத யாத்திரையைப் பற்றிய வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது. இந்தக் காணொளி தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் நடந்த மதுரை சித்திரைத் திருவிழாவினுடையது. அதுவே இப்போது ஜகன்னாத் யாத்ரா என்று பகிரப்பட்டிருக்கிறது.

  • Claim Review : ஜகன்னாத் ரத யாத்திரையின் காணொளி
  • Claimed By : பிரஷாந்த் பாட்டீல்
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later