உண்மை சரிபார்ப்பு: புர்க்கா அணிந்து செய்தி வாசிக்கும் ஆஃப்கன் ஆங்க்கர் ஒருவரின் புகைப்படம் தவறான சூழ்நிலைப் பொருத்தத்தில் பகிரப்பட்டது.
விஷ்வாஸ் நியூசின் புலன்விசாரணையில் இந்த வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று தெரிய வந்தது. இந்த வைரல் படம் கத்தாரின் ஒரு ஆங்க்கருடையது அல்ல, அது ஆஃப்கானிஸ்தானின் ஒரு செய்தி ஆங்க்கருடையது, அது தவறான க்ளைமுடன் இப்போது பகிரப்படுகிறது.
- By: Pragya Shukla
- Published: Jun 26, 2022 at 04:31 PM
- Updated: Jul 7, 2023 at 06:04 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): நூபூர் ஷர்மா சர்ச்சையில் பல மத்திய கிழக்கு நாடுகள் பெரும் கோபத்தைக் காட்டும் இந்த நேரத்தில், ஒரு பெண் தொலைக் காட்சி ஆங்க்கர் ஒரு புர்க்கா அணிந்திருக்கும் படம் சமூக ஊடகத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த புர்க்கா அணிந்திருக்கும் கத்தார் நாட்டு செய்தித் தொகுப்பாளர் ஃபாத்திமா ஷேக் இந்தியாவில் உள்ள மத சுதந்திரம் பற்றி தன் கவலையை வெளியிடுவதாக க்ளைம் செய்யப்படுகிறது.
விஸ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையில் இந்தக் க்ளைம் தவறாக வழி நடத்துவது என்று கண்டு பிடித்தது. வைரல் ஆகியிருக்கும் இந்தப் படம் கத்தார் நாட்டு ஆங்க்கருடையது அல்ல, ஆஃப்கானிஸ்தானின் செய்தித் தொகுப்பாளர் கட்டேரா அஹமதியுடையது.
க்ளைம்:
ஜூன் 8 அன்று இந்தப் படத்தைப் பகிரும்போது, ஃபேஸ்புக் பயனர் மூல்சந்த் டாதிச் (ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பு) எழுதினார்: “கத்தாரி ஆங்க்கர் ஃபாத்திமா ஷேக் தேசியத் தொலைக்காட்சியில் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரம் பற்றி கவலை தெரிவிக்கிறார்.”
புலன் விசாரணை
இந்த வைரல் க்ளைமின் உண்மையை அறிய, நாங்கள் இந்தப் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். ஒரு மூலப் படம் AP Images-இல் அப்லோட் செய்யப்பட்டிருப்பதை நாங்கள் கண்டு பிடித்தோம்..
தலைப்பில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, இந்தப்படம் ஆஃப்கானிஸ்தானின் செய்தித் தொகுப்பாளர் கட்டேரா அஹமதியுடையது. தலைப்பு சொல்கிறது, “தொலைகாட்சி ஆங்க்கர் கட்டேரா அஹமதி மே 22, 2022 அன்று ஆஃப்கானிஸ்தான் காபுலில் டோலோ நியூஸ்-இல் செய்தியைப் படிக்கும்போது ஒரு முகத் திரை அணிந்து தன் தலையைக் குனிந்து கொண்டிருக்கிறார். ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்கள் ஒளிபரப்பின்போது நாட்டில் உள்ள அனைத்து பெண் தொலைகாட்சி செய்தி ஆங்க்கர்களும் அவர்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் என்ற ஆணையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை தீவிரவாத கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக கருதப்பட்டு உரிமைப் போராளிகளால் கண்டிக்கப்படுகிறது (ஏபி ஃபோட்டோ/இப்ராஹீம் நோரூசி)”
முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி நாங்கள் கூகுளில் தேட ஆரம்பித்தோம். இதன் நடுவில் டோலோ நியூஸ் செய்தி இயக்குனர் சாத் மொஹ்செனியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கில் ஒரு ட்வீட் ஒன்றைக் கண்டுபிடித்தோம். மே 25 May 2022 அன்று இந்தப் படத்தைப் பகிர்ந்து சாத் மொஹ்செனி தலைப்பில் எழுதினார், “இந்தப் படத்தைப் பார்த்து வியப்பவர்களுக்கு: இங்கு நாம் பார்ப்பது நமது செய்தி வழங்குபவர்களில் ஒருவரான கட்டேரா அஹமதி, ஒரு செய்தி அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கிறார் – களைத்திருக்கிறார். முகத் திரை அணிந்து சிரமப்பட்டு மூச்சு விடுகிறார்.” #FreeHerFace
நாங்கள் ஆஃப்கன் செய்தியாளர் ஒமித் பாரூக்-ஐ மேல் விவரங்களுக்காகத் தொடர்பு கொண்டோம். அவர் எங்களிடம் கூறினார், “இந்த வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது. அவர் கட்டேரா அஹமதி, டோலோ தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர். டோலோ செய்தி இயக்குனர் சாத் மொஹ்செனியும் இந்தப் படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.”
புலன் விசாரணையின் முடிவில், விஷ்வாஸ் நியூஸ் இந்தத் தவறான க்ளைமைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் மேல் ஒரு சமூக ஸ்கேனிங் செய்தது. அந்த ஃபேஸ்புக் பயனர் 500 பேர்களால் தொடரப்படுகிறார், மூல்சந்த் டாதிச்க்கு 366 நண்பர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளனர்.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூசின் புலன்விசாரணையில் இந்த வைரல் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று தெரிய வந்தது. இந்த வைரல் படம் கத்தாரின் ஒரு ஆங்க்கருடையது அல்ல, அது ஆஃப்கானிஸ்தானின் ஒரு செய்தி ஆங்க்கருடையது, அது தவறான க்ளைமுடன் இப்போது பகிரப்படுகிறது.
- Claim Review : கத்தாரி ஆங்க்கர் ஃபாத்திமா ஷேக் தேசியத் தொலைக்காட்சியில் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரம் பற்றி கவலை தெரிவிக்கிறார்.
- Claimed By : மூல்சந்த் டாதிச்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.