X
X

உண்மை சரிபார்ப்பு: டிஜிட்டல் மூலம் திருத்தப்பட்ட கன்யாகுமரியின் ரயில்வே விளம்பரப்பலகை தவறான க்ளைமுடன் வைரல்

இந்தக் க்ளைம் பொய் என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையில் கண்டுபிடித்தது. இந்த வைரல் படம் திருத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்தப் பிம்பம் டிஜிட்டல் வழியாக திருத்தப்பட்டது.

விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி). பிரதம மந்திரி மோடியின் சென்னை வருகையை எதிர்த்து “திரும்பிப் போ மோடி’ என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ரயில் நிலையத்தில் இருப்பதாக க்ளைம் செய்து தமிழ் நாட்டு ரயில்வே நிலையத்தின் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. விஷ்வாஸ் நியுஸ் அந்தக் க்ளைம் தவறு என்று தன புலன்விசாரணையில் கண்டு பிடித்தது. அந்த வைரல் படம் திருத்தப்பட்டது, தமிழ் நாட்டு ரயில்வே நிலையத்தில் அந்த மாதிரி வாசகம் எழுதப்படவில்லை. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த பிம்பம் டிஜிட்டல் வழியாக திருத்தப்பட்டது.

அந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?

சுதாகர் சுகன்யா என்ற ஒரு ட்விட்டர் பயனர் (ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பு) இந்தப் பதிவைப் பகிர்ந்தார். அதன் தலைப்பு இவ்வாறு இருக்கிறது, “#GoBackModi ட்ரெண்ட் ஆகும்போது அது மோடியின் தமிழ் நாட்டு வருகை பற்றி என்பாதை நாம் அறிந்து கொள்ள முடியும்.  தமிழ் நாட்டு மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை. #GoBackModi.”

புலன் விசாரணை –

அந்தப் படத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க நாங்கள் அந்தப் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அதன் மூலப் பிம்பத்தை Business Insider கட்டுரையில் கண்டுபிடித்தோம். அது மார்ச் 17, 2017 அன்று பதிப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில்,

கட்டுரையாளர் எட் ஹான்லி, திப்ரூகர்  முதல் கன்யாகுமரி வரையிலான தன் 85-மணி நேர பயண அனுபவத்தைப் பற்றி பகிர்ந்திருந்தார்.

அந்தப் படம் வைரல் படத்தைப் போலவே அச்சு அசலாக இருந்தது, ஆனால் அந்தப் பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகம் வேறாக இருந்தது. இங்கிருந்த வாசகம் இவ்வாறு இருந்தது: கன்யாகுமரி தமிழில், ஹிந்தியில் மற்றும் ஆங்கிலத்தில். அந்த இரு படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கீழே உள்ள ஒட்டுவடிவத்தில் பார்க்கலாம்.

நாங்கள் எட் ஹான்லி பற்றி கூகுளில் தேட ஆரம்பித்தோம். எட் ஹான்லியின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலை நாங்கள் கண்டுபிடித்தோம். அந்தச் சேனலை ஸ்கேன் செய்தபிறகு நாங்கள் எட் ஹான்லியின் இந்திய வருகைக்கான காணொளி மார்ச் 3-ஆம் தேதி,  2016 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். அது வைரல் படத்தின் மூலப் பதிப்பை 1:41 நேர முத்திரையுடன் கொண்டிருந்தது.

இங்கும், பலகையில் எழுதியிருந்த வாசகம் கன்யாகுமரி என்று தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் விவரங்கள் பெற, நாங்கள் தனஞ்சயன், CPRO, தெற்கு ரயில்வே மண்டலம் என்பவரோடு தொடரபு கொண்டோம். விஷ்வாஸ் நியூஸ் அவரோடு அந்த வைரல் படத்தைப் பகிர்ந்து கொண்டது. அவர் எங்களிடம் கூறினார், “இந்த வைரல் க்ளைம் பொய்யானது. இந்தப் படம் திருத்தப்பட்டு, தவறான க்ளைமுடன் பகிரப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் தவறான க்ளைமுடன் சுதாகர் சுகன்யா என்ற ஒரு ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டிருந்தது. அவரின் தற்குறிப்புப் படி, அந்தப் பயனரை  514 பேர் தொடர்கிறார்கள். அவர் ட்விட்டரில் ஏப்ரல்   2021-லிருந்து நடப்பில் இருக்கிறார்.

निष्कर्ष: இந்தக் க்ளைம் பொய் என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையில் கண்டுபிடித்தது. இந்த வைரல் படம் திருத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்தப் பிம்பம் டிஜிட்டல் வழியாக திருத்தப்பட்டது.

  • Claim Review : When GoBackModi trends, we can know by default it is for Modi’s TN visit. TN people never shy away from expressing their emotions
  • Claimed By : sudhakarsuganya
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later