X
X

உண்மை சரிபார்ப்பு: இது ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்ச்சி அல்ல, தவறாக வழிநடத்தும் க்ளைமுடன் கூடிய தயாரிக்கப்பட்டக் காணொளியை மக்கள் பகிர்கிறார்கள்.

முடிவு. தன புலன் விசாரணையில் விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று கண்டுபிடித்தது. உண்மையில், இது பொழுதுபோக்குக்காகவும் விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி.

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்). 2 நிமிடங்கள் 52 வினாடிகள் நீளமுள்ள ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இதில், சாலையில் ப்ரேக் டவுன் ஆன தன காரோடு ஒரு பெண் போராடிக்கொண்டிருப்பது போல் இருக்கும். இந்தக் காணொளியில், ஒரு சிறுவன் அவளுக்குத் தொல்லை கொடுக்க முயற்சி செய்கிறான். மேலும் அந்தக் காணொளியில், ராணுவ சீருடை அணிந்த ஒருவர் அவரது பைக்கில் வந்து, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்கிறார். இது சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு உண்மை நிகழ்ச்சி என்று க்ளைம் செய்து, மக்கள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தன புலன் விசாரணையில் விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று கண்டுபிடித்தது. உண்மையில், இது பொழுதுபோக்குக்காகவும் விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி.

என்ன வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது

ஃபேஸ்புக் பக்கம் ‘Impress’  இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்து விவரக் குறிப்பில் எழுதியது “ராணுவத்துக்கு மரியாதை செலுத்துங்கள்’. கருத்துக்கள் சொல்லுமிடத்தில், இந்த காணொளியை உண்மை என்று நினைத்து அதை பாராட்டி மக்கள் எழுதுவதை பார்க்கலாம்.

இந்த வைரல் பதிவின் ஆவணப்படுத்தப்பட்டப் பதிப்பை இங்கே காணலாம்.

புலன் விசாரணை

விஷ்வாஸ் நியூஸ் முதலில் இந்த வைரல் காணொளியை பகுப்பாய்வு செய்தது. இந்தக் காணொளியின் அடியில் “Copyright by 3RD EYE” என்று எழுதியிருக்கிறது.

பிறகு நாங்கள் ‘3RD EYE’ என்ற முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இந்த வைரல் காணொளியின் ஸ்க்ரீன் க்ராப்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் கருவியில் அப்லோட் செய்து தேடினோம். பிப்ரவரி 16, 2022 அன்று இந்தக் காணொளியின் நீண்ட பதிப்பு 3RD EYE என்ற யூடியுப் சேனலில் அப்லோட் ஆகியிருப்பதைக் கண்டுபிடித்தோம். அந்தக் காணொளியின் விவரக்குறிப்பு “இந்த ராணுவ வீரரை வணங்குங்கள் | தனியாக இருந்த பெண் ராணுவ வீரரால் காப்பாற்றப்பட்டார் | 3rd Eye-யின் சமூக விழிப்புணர்ச்சிக் காணொளி” என்று இருந்தது. இந்தக் காணொளியின் இறுதியில் “இது பொழுதுபோக்குக்காகவும் பயிற்சிக்காகவும்” தயாரிக்கப்பட்டக் ஒரு காணொளி என்ற ஒரு பொறுப்புத் துறப்பும் இருந்தது.

3rd Eye யூடியுப் பக்கத்தின் ‘எங்களைப் பற்றி’ பகுதியில் நாங்கள் சோதித்தபோது, நாங்கள் ஒரு மின்னஞ்சல் ஐடி-யைக் கண்டுபிடித்தோம். அந்த மின்னஞ்சல் ஐடி-யோடு தொடர்பு கொண்டோம். “இந்தக் காணொளி பொழுதுபோக்குக்காகவும் பயிற்சிக்காகவும் தயாரிக்கப்பட்டது மேலும் இந்தக் காணொளியின் இறுதியிலும் விவரக் குறிப்பிலும் ஒரு தெளிவான பொறுப்புத் துறப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் உள்ள எந்தக் காணொளியையும் தவறான க்ளைமோடு பகிர வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.” என்ற பதில் எங்களுக்குக் கிடைத்தது.

இறுதியாக, இந்த தவறான வழிகாட்டல் பதிவுகளைப் பகிர்ந்த பக்கத்தை சோதித்துப் பார்த்தோம். அந்த ஃபேஸ்புக் பக்கத்தை 711 பேர் தொடர்கிறார்கள்.

निष्कर्ष: முடிவு. தன புலன் விசாரணையில் விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று கண்டுபிடித்தது. உண்மையில், இது பொழுதுபோக்குக்காகவும் விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி.

  • Claim Review : ராணுவத்துக்கு மரியாதை செலுத்துங்கள்’
  • Claimed By : Impress
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later