உண்மை சரிபார்ப்பு: அஸ்ஸாமில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படப்போகிறது என்று உரிமைக் கோரிக்கை விடுக்கும் பதிவு தவறாக வழிநடத்துவது.
முடிவு: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில் தெரிய வந்ததின்படி, இந்த வைரல் காணொளிக்கு ஒரு ய்தார்த்தமான அடிப்படை இல்லை. ஒரு அமைச்சரோ அல்லது மாநில அரசோ பொதுமுடக்கத்தின் சாத்தியத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை. எனவே இந்த வைரல் காணொளி தவறாக வழிநடத்துவது.
- By: Rangman Das
- Published: Nov 15, 2021 at 02:13 PM
குவாஹாத்தி (விஷ்வாஸ் நியூஸ்): அஸ்ஸாமில் மறுபடியும் பொதுமுடக்கம் விதிக்கப்படப்போகிறது என்ற உரிமைக் கோரிக்கையோடு உள்ள ஒரு டிஜிட்டல் போர்ட்டலின் பகுதி பக்கத்தின் திரைவெட்டு வைரல் ஆகிக்கொண்டிருப்பதைப் பற்றிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
அந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?
முகநூல் பக்கம் E News NE அக்டோபர் 19, 2021 அன்று இந்த வைரல் பதிவைப் பகிர்ந்து அஸ்ஸாமில் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் விதிக்கப்படலாம் என்று எழுதியது. அந்தக் காணொளியின் முதல் 58 நொடிகளில் மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கேஷப் மஹாந்தா மாநிலத்தில் இன்னும் ஒரு பொதுமுடக்கம் விதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த காணொளி மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கேஷப் மஹாந்தாவின் பத்திரிக்கையாளர் கூட்டத்திலிருந்து சில காட்சிகளைக் காட்டுகிறது.
புலன் விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையைத் தொடங்கியது. முதலில் அது, அக்டோபர் 19 அன்று அஸ்ஸாமில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மாநில சுகாதார அமைச்சர் கேஷப் மஹாந்தா பேசிய காணொளியை பரிசீலனை செய்தோம். அந்த செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பொதுமுடக்கத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அந்த செய்தியாளர் கூட்டத்தில் துர்கா பூஜாவிற்குப் பிறகான சூழ்நிலையை ஆராய்ந்த பின்னர் மாநில அரசு ஒரு முடிவெடுக்கும் என்று சொன்னார். அந்த முழு செய்தியாளர் கூட்டத்தைப் பற்றி இங்கே காணலாம்.
இருந்தும், My News NE என்ற போர்ட்டலில் அஸ்ஸாமில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று அறிக்கையிடப்பட்ட ஒரு செய்தியை நாங்கள் கவனித்தோம்.
இந்த செய்தி சமீபத்தில் மாநில மக்களிடையே ஒரு பதட்டத்தை விளைவித்த சமயத்தில், மாநில முதல் அமைச்சர் டாக்டர் ஹிமாந்தா பிஷ்வ ஷர்மா பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை என்று ட்வீட் செய்தார். இது போன்ற போலி செய்திகளால் அச்சப்பட வேண்டாம் என்று மக்களை அது வலியுறுத்தியது.
அதே சமயத்தில் அக்டோபர் 25 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில் முதல் அமைச்சர் அஸ்ஸாமில் பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை என்று உறுதி செய்தார். முதல் அமைச்சரின் அறிக்கையை கீழே காணலாம்.
விஷ்வாஸ் நியூஸ் த சென்டினல்-இன் செய்தியாளர் பல்லவி சைக்கியாவைத் தொடர்பு கொண்டு இந்த காணொளியைப் பகிர்ந்தது. அது மிகவும் தவறாக வழிநடத்துவது என்று அவர் எங்களிடம் கூறினார்.. அஸ்ஸாமில் பொதுமுடக்கம் குறித்து யாரும் சொல்லவோ கணிக்கவோ இல்லை. வெறும் யூகத்தின் பேரிலேயே இந்த செய்தி உருவாக்கப்பட்டது. அஸ்ஸாமில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்ற செய்தியை மீண்டும் முகநூலில் பகிர்ந்த E News NE போர்ட்டலின் முகநூல் தற்குறிப்பை நாங்கள் அலசியபோது 362416 பேர் அந்தப் பக்கத்தைத் தொடர்வதைக் கண்டு பிடித்தோம். ஆனால் அந்த வைரல் காணொளி 103000 பேரால் பார்க்கப்பட்டது மற்றும் 1000+ பேரால் பகிரப்பட்டது
निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில் தெரிய வந்ததின்படி, இந்த வைரல் காணொளிக்கு ஒரு ய்தார்த்தமான அடிப்படை இல்லை. ஒரு அமைச்சரோ அல்லது மாநில அரசோ பொதுமுடக்கத்தின் சாத்தியத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை. எனவே இந்த வைரல் காணொளி தவறாக வழிநடத்துவது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.