உண்மை சரிபார்ப்பு: முகக்கவசம் அணிந்ததற்கு தாலிபானை சிஎன்என் ஒன்றும் பாராட்டவில்லை, வைரல் புகைப்படம் போலியானது
முடிவு: விஷ்வாஸ் நியூஸ், தாலிபான் மாஸ்க் அணிவதை சிஎன்என் பாராட்டியதாகக் கூறும் இமேஜ் போலியானது என்பதை கண்டறிந்தது. இந்த இமேஜ் மற்றும் கட்டுரை ஒரு கேலி வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
- By: Ankita Deshkar
- Published: Aug 31, 2021 at 11:46 AM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): விஷ்வாஸ் நியூஸ் இணையத்தில் வைரலாகும் ஒரு புகைப்படத்தை கண்டது. இந்த இமேஜ் சிஎன்என் சேனலின் செய்தித் துணுக்கை போன்று இருந்தது. அதன் தலைப்பு இவ்வாறு இருந்தது: தாக்குதலின் போது முகக்கவசம் அணிந்தமைக்கு தாலிபானை சிஎன்என் பாராட்டுகிறது.
அந்த படத்திற்குக் கீழே, எழுதியிருப்பது என்னவென்றால், அண்மைச் செய்தி தாலிபான் போராளிகள் பொறுப்புடன் முகக்கவசம் அணிந்துள்ளனர் என்று இருந்தது. படத்தின் வலது பக்கத்தில் சிஎன்என் லோகோ தெளிவாகத் தெரிந்தது. விஷ்வாஸ் நியூஸ் உண்மை கண்டறிதலில் பரவலாக பரப்பப்படும் இந்த படம் போலியானது என்று கண்டறிந்தது , சிஎன்என் அவ்வாறு செய்தி எதையும் பகிரவில்லை.
கிளைம்:
டுவிட்டர் ஹேன்டில், டாக்டர். அஷுதோஷ் அகர்வால் @drashutoshbly இந்த வைரல் இமேஜை பகிர்ந்து இவ்வாறு எழுதியுள்ளார்: நீங்கள் மிகக் கடுமையான நம்பிக்கையாளராக இருக்கும்போது.
இந்த வைரல் போஸ்ட் மற்றும் அதன் ஆர்ச்சிவ் பதிப்பை இங்கு காணவும்.
பிற டுவிட்டர் பயனர்களும் இதைப் பகிர்ந்துள்ளார்கள்.
இந்தப் படம் பல இந்தியப் பிரபலங்கள் மற்றும் தலைவர்களாலும் பகிரப்பட்டுள்ளது.
புலனாய்வு:
விஷ்வாஸ் நியூஸ், பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த படம் பரவலாகப் பகிரப்படுவதை கண்டறிந்தது.
விஷ்வாஸ் நியூஸ் முதலில் இந்த இமேஜை ஆராய்ந்தது. இந்தப் படத்தின் மீது ஆகஸ்ட் 14, 2021 – BabylonBee.com என்று இருந்தது.
Babylon Bee இன் டுவிட்டர் பக்கத்தில் இந்த கட்டுரை பகிரப்பட்டிருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
இந்தப் பதிவில் அவர்கள் தங்கள் வலைத்தளத்திலிருந்து இந்த ஆர்ட்டிகிளை பகிர்ந்திருந்தனர்.
வலைத்தளத்தின் about us பகுதியை நாங்கள் பார்த்தோம். அந்த பகுதியில் இவ்வாறு இருந்தது: The Babylon Bee உலகின் மிகச்சிறந்த கேலி செய்யும் வலைத்தளம், இது உண்மை என்று சொல்லும் கிளைம்கள் எதுவும் நிலையானதல்ல. நாங்கள் கிறிஸ்தவம், அரசியல் மற்றும் தினசரி வாழ்வு குறித்து கேலியாக எழுதுகிறோம்.
இதன் மூலம் அந்த செய்தி ஒரு கேலிச் செய்தி என்பது தெளிவாகிறது. விஷ்வாஸ் நியூஸ் பேபிலோன் பீ ஐ அவர்களின் தொடர்புப் பக்கம் மூலமாக தொடர்பு கொண்டது. அவர்கள் பதிலளித்தனர், அப்போது அவர்கள் கேலியான வெளியீடுகளை செய்வதாகவும் அவர்களின் ஆர்ட்டிகள் அனைத்தும் கேலி தானே தவிர உண்மைச் செய்தி அல்ல என்றும் தெரிவித்தனர்.
விஷ்வாஸ் நியூஸ் பின்னர் இந்த படத்தை பகிர்ந்த டுவிட்டர் பயனரின் பின்புலத்தைச் சரிபார்த்தது. டாக்டர் அஷுதோஷ் அகர்வால் ஒரு பல் மருத்துவர் அவர் 1,737 நபர்களை ஃபாலோ செய்வதோடு அவருக்கு 462 ஃபாலோயர்கள் உள்ளனர்.
निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸ், தாலிபான் மாஸ்க் அணிவதை சிஎன்என் பாராட்டியதாகக் கூறும் இமேஜ் போலியானது என்பதை கண்டறிந்தது. இந்த இமேஜ் மற்றும் கட்டுரை ஒரு கேலி வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.