X
X

உண்மை சரிபார்ப்பு: குட்ரோச்சியின் புகைப்படம் என்று சொல்லி வைரலான ராகுல் காந்தியின் புகைப்படம், வைரல் பதிவு போலியானதாகும்

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவு போலியானது என்பதை புலனாய்வு செய்து கண்டறிந்தது. உண்மையில், ராகுல் காந்தி தான் சோனியா காந்தியுடன் நிற்கிறார். இந்தப் படம் 1996 நிகழ்வில் எடுக்கப்பட்டது.

விஷ்வாஸ் நியூஸ் (புது தில்லி).காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி (Rahul Gandhi) தோன்றுகிற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. க்ளைமின் படி சோனியா காந்திக்கு பின் நிற்கிற நபர் இத்தாலிய தொழிலதிபர்  ஒட்டாவியோ குட்ரோச்சி (Ottavio Quattrocchi) என்று கூறப்பட்டது.  விஷ்வாஸ் நியூஸ் புலனாய்வு செய்து இந்த வைரல் பதிவு போலி என்பதை கண்டறிந்துள்ளது. உண்மையில் சோனியா காந்தியுடன் நின்றிருப்பது ராகுல் காந்திதான். இந்தப் புகைப்படம் 1996 இல் நடந்த ஒரு நிகழ்விலிருந்து எடுக்கப்பட்டதாகும்.          

க்ளைம்

ஃபேஸ்புக் பயனர் கிருஷ்ண சுதர் ராவத்கேரா (Krishna Suthar Rawatkhera) சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி  இருக்கிற ஒரு புகைப்படத்தை ஜுன் 4 பதிவிட்டு, பின்வருமாறு க்ளைம் செய்திருந்தார்: ‘,இது ராகுல் கான் அல்ல, இது ஒட்டாவியோ குட்ரோச்சி, இவர் அவருடைய கேபரே நடனக்காரியான அம்மாவின் நெருங்கிய நண்பர், இதற்கு மேல் இதுகுறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை…“

இந்த ஃபேஸ்புக் பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

புலனாய்வு

விஷ்வாஸ் நியூஸ்  முதலில் இந்த வைரல் படத்தை கூகுள் (Google) ரிவர்ஸ் இமேஜ் கருவியில் அப்லோட் செய்து தேடியது. இந்த புகைப்படம் எங்களுக்கு யாஹுவில் (Yahoo) கிடைத்தது. ராகுல் காந்தியின் பிறந்தநாள் தொடர்பான ஃபோட்டோ ஆல்பம் ஒன்றில் இந்தப் புகைப்படம் இடம்பெற்றிருந்த்து. இதை நீங்கள்  இங்கு காணலாம். எங்களது புலனாய்வின்போது, இந்தப் புகைப்படம் இண்டியன் எக்ஸ்பிரஸின் வலைத்தளத்தில் இடம்பெற்றிருந்ததையும் கண்டோம்.  இந்தப் புகைப்படத்தில் உள்ள கேப்ஷனைக் காணும்போது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் தன் மகனுடன் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் ஒரு நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார் என்பதை அறிந்தோம். இந்த புகைப்படம் ஏப்ரல் 8, 1996 எடுக்கப்பட்டது. இது பி.டி.ஐ. PTI புகைப்படக்கார்ரால் எடுக்கப்பட்டது. இந்த அசல் படத்தை இங்கு காணவும்.

புலனாய்வின் அடுத்த கட்டத்தில், விஷ்வாஸ் நியூஸ் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங்கை தொடர்பு கொண்டது. அவர் கூறுகையில் இத்தகைய கீழான செயல்கள் எல்லாம் டிரால் ஆர்மியால் தான் செய்யப்பட்டிருக்கும் என்றார். இந்தப் படத்தில் ராகுல் காந்தியைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் சிலர் காந்தி குடும்பத்தினரைக் கண்டு அச்சப்பட்டு அல்லும் பகலும்  அவர்களின் புகழை கெடுக்க முயற்சித்துக் கொண்டே உள்ளார்கள்.

வைரல் புகைப்படத்தை பகிர்ந்த கிருஷ்ண சுதார் ராத்கேரா என்னும் பயனரின் ப்ரொஃபைலை நாங்கள் ஆய்ந்து பார்த்தோம். இந்தப் பயனருக்கு ஃபேஸ்புக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளதை நாங்கள் அறிந்தோம்.

निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவு போலியானது என்பதை புலனாய்வு செய்து கண்டறிந்தது. உண்மையில், ராகுல் காந்தி தான் சோனியா காந்தியுடன் நிற்கிறார். இந்தப் படம் 1996 நிகழ்வில் எடுக்கப்பட்டது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later