X
X

உண்மைத்தன்மை சரிபார்ப்பு (ஃபேக்ட் செக்): பிஜேபி எம்.பி. மேனகா காந்தியின் பெயரில் காங்கிரஸ் தலைவர் டாலி சர்மாவின் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது.

முடிவு: விஷ்வாஸ் நியூஸின் புலனாய்வில் வைரல் வீடியோவுடன் கூறப்பட்ட விஷயங்கள் பொய் என்பது தெரிகிறது. பெண் பிஜேபி எம்பியாக இந்த வைரல் வீடியோவில் காட்டப்பட்டது மேனகா காந்தி அல்ல, காங்கிரஸ் தலைவரும் உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்திலிருந்து 2019 மக்களைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவருமான டாலி ஷர்மா ஆவார்.

  • By: ameesh rai
  • Published: Jun 18, 2021 at 09:55 PM
  • Updated: Jul 7, 2023 at 06:06 PM

விஸ்வாஸ் நியூஸ் (புது தில்லி). சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்  ஒரு பெண் கொரோனா தொடர்பாக மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்தை விமர்சிப்பது தெரிகிறது. சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் இந்த வீடியோவில் உள்ளது பிஜேபி எம்பி மேனகா காந்தி என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் சொல்வது பொய்யானது என்பது விஸ்வாஸ் நியூசின் புலனாய்வில் தெரியவருகிறது.  இந்த வீடியோவில் உள்ளவர் காங்கிரஸ் தலைவர் டாலி ஷர்மா . இவர் 2019 மக்களவைத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காஸியாபாத் தொகுதியில் போட்டியிட்டவரும் ஆவார்.

எது வைரலாகிறது

விஸ்வாஸ் நியூஸ், உண்மை தன்மை சரிபார்க்கும் அதன் வாட்ஸப் சாட்போட்டிலும் )  உண்மைத்தன்மை சரிபார்ப்புக்காக இந்த  வைரல் வீடியோவை  கிடைக்கப் பெற்றது. முக்கிய வார்த்தைகளை வைத்து தேடுகையில், இந்த வீடியோ ஃபேஸ்புக்கிலும் வைரலாகியிருந்ததை நாங்கள் கண்டோம். இந்த வீடியோவை 27 மே 2021 அன்று பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் Asiadullah Imran (அசியாதுல்லா இம்ரான் ) பின்வருமாறு எழுதியுள்ளார். ”பிஜேபி எம்பியின் மனதின் குரலை கேட்டுப் பாருங்கள். மதிப்பிக்குரிய திருமதி மேனகா காந்தி அவர்கள் இது “மன் கி பாத்“ இல்லை.) இந்தப் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்களை இங்கு கீழே காணலாம்.

புலனாய்வு

விஷ்வாஸ் நியூஸ் முதலில்  இந்த வைரல் வீடியோவை கவனமாகப் பார்த்தது. இந்த வைரல் வீடியோவின் நீளம் 3 நிமிடங்கள் 31 விநாடிகள். இந்த வீடியோவில் பேசும் பெண் கொரோனா தொடர்பான விஷயங்கள் குறித்து நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியுள்ளது தெரிகிறது. வீடியோவின் முதல் 10 விநாடிகளிலேயே இதில் வரும் பெண் தன் வயது 36 என்று கூறியுள்ளார். திருமதி மேனகா காந்தியால் மார்ச் 2014-ல் தேர்தல் கமிஷனின் வலைத்தளத்தில்  http://affidavitarchive.nic.in/ -ல் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை நாங்கள் பார்த்தோம்.

லோக்சபா வலைத்தளத்தில் உள்ள மேனகா காந்தியின் ப்ரோஃபைல் மூலம் இது மேலும் உறுதி செய்யப்படுகிறது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி, மேனகா காந்தி 26 ஆகஸ்ட் 1956-ல் பிறந்தவர் ஆவார். இதை இங்கு க்ளிக் செய்து காணலாம்.

வீடியோவில் வரும் பெண்ணால் கூறப்பட்ட வயதுக்கும் மேனகா காந்தியின் உண்மையான வயதுக்கும் உள்ள முரண்பாட்டைத் தொடர்ந்து, நாங்கள் வைரல் வீடியோ குறித்து கூறப்பட்டுள்ளது குறித்து சந்தேகம் அடைந்தோம். சந்தேகத்திற்கான இன்னொரு காரணம் இதை உறுதி செய்யக்கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கை வலைத்தளத்தில் எங்களால் காண முடியவில்லை என்பதுதான். ஒருவேளை பிஜேபி எம்பி மேனகா காந்தி தனது கட்சியின் அரசையே எதிர்த்துப் பேசியிருந்தால், அது பெரிய அளவில் பேசப்படுகிற ஒரு விஷயமாக மாறியிருக்கும் என்பதோடு நம்பத்தகுந்த ஊடகங்கள் அனைத்திலும் கட்டாயமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

எங்கள் புலனாய்வின் தொடர்ச்சியாக, ஃபேஸ்புக் பயனர்   Asjadullah Imran-இன்  பதிவிற்கான கமென்ட்களையும் கூர்ந்து கவனித்தோம். இதில் சில பயனர்கள் இந்த வீடியோவில் வரும் பெண் மேனகா காந்தி அல்ல என்று கூறியுள்ளார்கள். கமென்ட்டில் ஒரு பயனர் இதில் வருபவர் டாலி ஷர்மா என்று கூறியுள்ளார். இதில் காணப்படும் கூறுகளின் அடிப்படையில், வைரல் வீடியோவின் முக்கியமான காட்சிகளை எடுத்து அதை InVID கருவியில் செலுத்தினோம். பிறக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் கருவியை முக்கிய காட்சிகளில் பயன்படுத்தி பரிந்துரை வார்த்தையில் டாலி ஷர்மா என்பதையும் பயன்படுத்தினோம்.

வலைத்தளத்தில் ஒரே விதமான பல ரிசல்ட்களை நாங்கள் பார்த்தோம். டிவிட்டர் ஹேன்டிலில் Kuldeep Sharma  (குல்தீப் ஷர்மா) என்ற பெயரில் (@KuldipshrmaMP06) மே 14 2021 அன்று ஒரு ட்வீட்டை நாங்கள் வரப்பெற்றோம். இந்த ட்வீட் 13 மே 2021 இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்  ஹேன்டிலிலிருந்து இந்த வைரல் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. குல்தீப் ஷர்மா தனது ட்வீட்டில் வீயோவில் காணப்படும் பெண் காங்கிரஸ் தலைவரும் மற்றும் காசியாபாத் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டாலி ஷர்மா என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்த ட்வீட்டை பின்வரும் லின்க்கில்  காணலாம்.

https://twitter.com/kuldipshrmamp06/status/1393245481405272064

இதன் பின் நாங்கள் இணையத்தில் டாலி ஷர்மா குறித்து தேடினோம். பின் இந்த வைரல் வீடியோவை டாலி ஷர்மாவின் அலுவல்பூர்வமான  ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டோம். உண்மையில் 20 ஏப்ரல் 2021 அன்று டாலி ஷர்மா ஒரு Facebook Live  பேஸ்புக் லைவ் செய்திருக்கிறார். 22 நிமிடங்கள் 54 விநாடிகள் செல்லும் இந்த ஃபேஸ்புக் லைவில், வைரல் வீடியோவின் பாகத்தை 14 நிமிடங்கள் 16 விநாடிகளில் காணலாம்.

இதுவரை நாங்கள் செய்த புலனாய்வின் மூலமாக, வைரல் வீடியோவில் உள்ளவர் பிஜேபி எம்பி மேனகா காந்தி அல்ல, காங்கிரஸ் தலைவர் டாலி ஷர்மா தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்த நாங்கள் எங்கள் சக பணியாளர் டெய்னிக் ஜக்ரானின் சாஹிபாபாத் பீரோவின் தலைவர் Saurabh Pandey (சவ்ரப் பாண்டே)-வை தொடர்பு கொண்டோம். இந்த வைரல் வீடியோவில் தோன்றும் பெண், காசியாபாத் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் டாலி ஷர்மா என்பதை அவரும் உறுதி செய்தார்.

தவறாக சித்தரித்து இந்த வைரல் வீயோவை பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் Asjadullah Imran-இன் ப்ரொஃபைலை விஸ்வாஸ் நியூஸ் நன்கு ஆய்ந்து பார்த்தது. இந்த பயனர் ஜாம்ஷெட்பூரில் வாழ்பவர்.

निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸின் புலனாய்வில் வைரல் வீடியோவுடன் கூறப்பட்ட விஷயங்கள் பொய் என்பது தெரிகிறது. பெண் பிஜேபி எம்பியாக இந்த வைரல் வீடியோவில் காட்டப்பட்டது மேனகா காந்தி அல்ல, காங்கிரஸ் தலைவரும் உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்திலிருந்து 2019 மக்களைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவருமான டாலி ஷர்மா ஆவார்.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later