Fast Check: தஞ்சாவூரின் பழைய வீடியோவானது சேலம் என்று வைரலாகிக் கொண்டிருக்கிறது
முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று பொய்யானது என தெரிய வந்துள்ளது. இது உண்மையில் தஞ்சாவூரிலுள்ள ஒரு பழைய வீடியோ, சேலத்தைச் சேர்ந்த சமீபத்திய வீடியோ அல்ல.
- By: Pallavi Mishra
- Published: Apr 30, 2021 at 01:30 PM
- Updated: May 1, 2021 at 02:18 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): சமூக ஊடக வைரல் வீடியோவில், சிலர் ஒரு நபரை அடிப்பதைப் பார்க்கலாம். வீடியோவில் ஒரு போலீஸ்காரரையும் பார்க்கலாம். அந்த நபர் குழந்தைகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்து பிடிபட்ட ஒரு கடத்தல்காரன் என்று வீடியோ கூறுகிறது. விஷ்வாஸ் நியூஸ் விசாரணையில், இந்த கூற்று பொய்யாகியுள்ளது. இது உண்மையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பழைய வீடியோ, சேலத்தைச் சேர்ந்த சமீபத்திய வீடியோ அல்ல.
வைரல் பதிவில் உள்ளது என்ன?
ஒரு வைரல் பதிவில் சிலர் ஒரு நபரை அடிப்பதைப் பார்க்கலாம். பதிவுடன் தலைப்பானது தமிழில் எழுதப்பட்டுள்ளது, “சேலத்தில் சின்ன பிள்ளைகளை கடத்துவதற்கு வெளி மாநிலங்களில் இருந்து நானூறு பேர் வந்துள்ளாகளாம் அதில் ஒருவன் மட்டுமே பிடிபட்டுள்ளான் சுற்றியுள்ள பொதுமக்கள் பிடிபட்ட நபரை நய்யபுடைத்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் இந்த விடியோவை ஷேர் பண்ணுங்கள் ப்ளீஸ்” இதன் மொழிபெயர்ப்பு என்னவென்றால், “வேறு மாநிலத்தைச் சேர்ந்த நானூறு பேர் குழந்தைகளை கடத்துவதற்கு சேலத்திற்குள் நுழைந்துள்ளனர். ஒருவன் பிடிபட்டான்.”
இந்த பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட லிங்கை இங்கு காணலாம்.
விசாரணை
விசாரணையை ஆரம்பிப்பதற்கு, நாங்கள் இந்த வீடியோவை இன்விட் கருவியல் போட்டு, அதன் கீ-ஃப்ரேம்களை நீக்கினோம். அதன்பின் இந்த கீ-ஃப்ரேம்களில் நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலை பயன்படுத்தினோம். maalaimalar.com இல் 2019 பிப்ரவரி 20 அன்று வெளியிடப்பட்ட செய்தியில் வீடியோவின் கீ-ஃப்ரேமை நாங்கள் கண்டறிந்தோம். செய்தியின்படி, “பழைய பேருந்து நிலையமானது தஞ்சாவூரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கிருந்து பேருந்துகள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இருக்கிறது. ஆகவே, நேற்று மாலையில், மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் போது, ஒரு இளைஞர் அங்குமிங்கும் சுற்றித்திரிந்திருக்கிறார், அவன் அதிகமாக மதுபானம் அருந்தியிருந்திருக்கிறான். திடீரென இளைஞன் மாணவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான். அதன்பின் அவன் 7 ஆம் வகுப்பு மாணவியிடம், ‘நான்தான் உன் அப்பா, வா வீட்டிற்குப் போவோம்’ என்றான். அந்த மாணவிக்கு மட்டுமல்ல அதைக் கேட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின் அவன் மாணவியின் கையைப் பிடித்து அவளைக் கடத்த முயற்சி செய்தான். பயந்துபோன மாணவி, “என்னை காப்பாற்றுங்கள், என்னை காப்பாற்றுங்கள்” என்று கத்தினாள். சத்தத்தைக் கேட்ட மக்கள் ஓடிச் சென்று அவனிடமிருந்து அந்த சிறுமியை மீட்டனர். அவன் இன்னும் மதுபானம் அருந்தியிருந்தான்.”
நாங்கள் இந்த வீடியோவை tamil.oneindia.com என்ற தளத்திலும் பார்த்தோம். வீடியோவானது செய்தியில் எழுதப்பட்ட தலைப்புடன் 2021 பிப்ரவரி 21 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. “தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்த முயன்ற ஒருவனை பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்தனர். தஞ்சாவூரில் உள்ள சமூக வலைதளத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது”
தஞ்சாவூருக்கும் சேலத்திற்கும் இடையில் மொத்தம் 191 கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த விஷயம் குறித்து மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கு தஞ்சாவூரின் ராமகிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் தாமோதர் விக்ரம் அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். சம்பவம் நடந்த 2019 பிப்ரவரி மாதத்தில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி செல்லும் சிறுமியை மதுபானம் அருந்திய ஒரு போக்கிரி கடத்த முயன்றான். ஆனால், அங்கிருந்தவர்கள் அவனைப் பிடித்து நையப்புடைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.”
வைரல் படத்தை பகிர்ந்து கொண்ட பயனர் விஜேந்திரனின் சமூக ஸ்கேனிங் ஆனது பயனர் தமிழ்நாட்டில் வசிப்பதாகவும், அவருக்கு முகநூலில் 1,749 நண்பர்கள் இருப்பதாகவும் காண்பித்தது.
निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று பொய்யானது என தெரிய வந்துள்ளது. இது உண்மையில் தஞ்சாவூரிலுள்ள ஒரு பழைய வீடியோ, சேலத்தைச் சேர்ந்த சமீபத்திய வீடியோ அல்ல.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.